• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேதனப் பசளை, இயற்கை கனிய மற்றும் Chelated நுண் தாவர போசாக்குகளின் உற்பத்தியும் விநியோகமும்
- 2021 மே மாதம் 31 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் 2021 / 2022 பெரும்போகம் சார்பில் சேதனப் பசளை, இயற்கை கனிய மற்றும் Chelated நுண் தாவர போசாக்குகளின் இறக்குமதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, நெற்செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையினை அரசாங்க பசளை கம்பனிகளினால் இறக்குமதி செய்வதற்கும் ஏனைய பயிர்கள் சார்பில் அனுமதி பத்திரம் பெற்ற பசளை கம்பனிகளினால் தேவையான சேதனப் பசளையினை இறக்குமதி செய்து போட்டி விலைகளின் மீது விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏனைய பயிர்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்குத் தேவையான சேதனப் பசளையினை தாமதமின்றி போட்டி விலையில் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் அரசாங்கத்தின் இரண்டு (02) பசளை கம்பனிகளினாலும் ஏனைய பயிர்கள் சார்பில் சேதனப் பசளையினை இறக்குமதி செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.