• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
- பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது பிராந்திய மட்டத்தில் கைத்தொழில்களின் மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் பிரதான நிகழ்சசித்திட்டமொன்றாகும். இதன் பொருட்டு முதலீட்டாளர்களை தெரிவு செய்தலானது 1990 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள "பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழு" மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள "அமைச்சி்ன் கருத்தி்ட்டங்களை மதிப்பிடும் குழு" என்பவற்றினால் கருத்திட்ட பிரேரிப்புகளை முழுமையாக மதிப்பிட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படும். இதற்கிணங்க மேற்போந்த குழுக்களினால் 24 கருத்திட்ட பிரேரிப்புகளை ஆராய்ந்து இந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத் துவதற்கு 10 கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குவதற்கு சிபாரிசு செய்துள்ளன. இந்த சிபாரிசுகளுக்கு அமைவாக உரிய முதலீட்டாளர்களுக்கு 35 வருட நீண்டகால குத்தகை அடிப்டையில் காணித் துண்டுகளை குறித்தொதுக்குவது சிபாரிசு செய்துள்ளது. இந்த சிபாரிசுகளின்' பிரகாரம் உரிய முதலீட்டாளர்களுக்கு 35 வருட நீண்டகால குத்தகை அடிப்டையில் காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.