• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் (அம்ரிதா மருத்துவமனை) மூலம் இருதய நோயுடனான சிறுவர்களுக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்தல்
- ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 சிறுவர்கள் நாட்டில் இருதய நோயுடன் பிறக்கின்றார்கள். அவர்களில் 1,500 - 2,000 இடைப்பட்டோருக்கு சத்திரசிகிச்சை தேவையானதாகும். பெரும்பாலான வைத்தியசாலைகளிலிருந்து இத்தகைய சிறுவர்களை கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு தொடர்புபடுத்துகின்ற போதிலும் இந்த வைத்தியசாலையில் காணப்படும் வசதிகளுக்கு ஏற்ப ஆண்டொன்றில் அண்ணளவாக 900 சத்திர சிகிச்சைகளை மட்டுமே மேற்கொள்ளலாம். ஆதலால், தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள "Little Hearts" கருத்திட்டத்தின் கீழ் அறுவைசிகிச்சைகூடங்கள் மற்றும் அவசர இருதய சிகிச்சைக்கு போதுமான வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்வது தொடர்பில் நிலவும் தாமதத்தினைக் குறைக்கும் பொருட்டு இந்தியாவின் மாவட்டம் 3201 சர்வதேச ரொட்டரி கழகம் மற்றும் RID 3220 கொழும்பு மேற்கு ரொட்டரி கழகம் என்பன மூலம் இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில் சிறுவர்களுக்கான உட்சிக்கல்வாய்ந்த இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளும் வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக இரண்டு (02) வருடகால கருத்திட்டமொன்றை ரொட்டரி கழகத்தின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு சுகாதார அமைச்சுக்கும் இந்தியாவின் மாவட்டம் 3201 சர்வதேச ரொட்டரி கழகத்துக்கும் RID 3220 கொழும்பு மேற்கு ரொட்டரி கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.