• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்திற்கான திருத்தம்
- 2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டிற்காக 2,997 பில்லியன் ரூபாவைக் கொண்ட கடன் எல்லை சார்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், COVID - 19 தொற்று காரணமாக எழுந்துள்ள நிலைமையின் கீழ் அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்தமை, சுகாதார துறைசார்ந்த செலவுகள் அதேபோன்று வருமானம் இழந்தவர்களின் சமூக பாதுகாப்பினை கவனித்தல், தமது வருமானத்திலிருந்து சம்பளம் செலுத்திய நிறுவனங்களின் வருமானம் இல்லாமற்போனமை காரணமாக சம்பளம் உட்பட ஏனைய செலவுகளுக்காக மேலதிக நிதி ஏற்பாடுகளை வழங்க நேர்ந்தமை அடங்கலாக வேறு சில துறைகளுக்கான செலவுகள் அதிகரித்தமை காரணமாக 2021 ஆம் ஆண்டுசார்பில் அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லையை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்கிணங்க, 2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 2,997 பில்லியன் ரூபாவைக் கொண்ட கடன் எடுத்தல் எல்லையை மேலும் 400 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாவாக திருத்துவதற்கும் இதன் பொருட்டு குறித்த ஒதுக்கீட்டு சட்டத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.