• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"இளமையின் எதிர்பார்ப்பு - Hope for Youth" - தேசிய இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- இலங்கை சனத்தொகையில் வயது 15 தொடக்கம் 29 வருடங்களுக்கு இடைப்பட்ட மொத்த இளைஞர் சனத்தொகை 23.2 சதவீதமாவதோடு, இது எண்ணிக்கை ரீதியில் சுமார் 5.6 மில்லியன் ஆகும். இந்த இளைஞர் சனத்தொகையை நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு நேரடியாக இணைத்துக் கொள்ளும் நோக்கில் அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் "இளமையின் எதிர்பார்ப்பு - Hope for Youth" என்னும் தேசிய இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 28 சதவீதமாக நிலவும் இளைஞர் யுவதிகளின் தொழிலற்ற நிலையை 12 சதவீதமாக குறைத்தல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கிணங்க, 2019 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட 'யொவுன்புரய' நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பதிலாக 2021 ஆம் ஆண்டிலிருந்து "இளமையின் எதிர்பார்ப்பு - Hope for Youth" என்னும் நிகழ்ச்சித்திட்டத்தை சகல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் இலக்காகக் கொண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.