• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமத்திய மாகாணத்தில் விவசாய உள்ளீடுகள் மூலம் பிறப்பிக்கப் படுகின்றதும் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியதுமான கழிவுகளை முகாமித்தல்
- விவசாய உள்ளீடுகளுக்காக பயன்படுத்தப்படும் பொதிகள் பெரும்பாலானவை Polyethylene, Terephthalate, கண்ணாடி, அடர்த்தியுடன் கூடிய Polyethylene, Polypropylene ஆகிய பொருட்களினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களை முறையற்ற விதத்தில் சூழலில் விடுவித்தலும் பயிர்ச்செய்கை நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு அருகாமையில் எரித்தலும் சூழல் மாசடைவதற்கு காரணியாய் அமைந்துள்ளமையினால் அவற்றை முறையாக மீள் சுழற்சி செய்வதற்கு சுற்றாடல் அமைச்சினால் நிகழ்ச்சித்திட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் நெறிப்படுத்தலின் கீழ் 2016 ஆம் ஆண்டிலிருந்து மத்திய சுற்றாடல் அதிகாரசபை, பூச்சிக்கொல்லி அலுவலகம் மற்றும் Croplife Sri Lanka Private Limited கம்பனி என்பன இணைந்து செயற்படுத்தும் பிளாஸ்ரிக் மற்றும் கண்ணாடி போன்ற அப்புறப்படுத்தும் வெற்று வெற்றுப் பொருட்களைத் திரட்டி செயற்படுத்தும் மீள் சுழற்சி நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் விரிவுபடுத்தி விவசாய அமைப்புகள், நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்கள் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபையின் பிரிவு முகாமைத்துவ அலுவலகங்கள் என்பவற்றின் ஒத்துழைப்புடன் வடமத்திய மாகாணத்தில் முன்னோடிக் கருத்திட்டமொன்றாக உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு உலக சுகாதார அமைப்பின் சுகாதார, நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு மேம்படுத்தல் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றங்களைக் குறைத்தல் சார்பில் ஒத்துழைப்பு நல்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக தேவையான நிதி ஏற்பாடுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு சிறுபோகத்திலும் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தையும் ஒவ்வொரு பெரும்போகத்திலும் செப்ரெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தையும் வெற்று பிளாஸ்ரிக் மற்றும் கண்ணாடி பொருட்களை ஒன்று திரட்டுமும் வாரங்களாக பிரகடனப்படுத்தி கமத்தொழில் துறைசார்ந்த உத்தியோகத்தர்களினதும் விவசாய அமைப்புகளினதும் ஒத்துழைப்புடன் உத்தேச வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினாலும் கமத்தொழில் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.