• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றாடல் மாசடைதலை கட்டுப்படுத்தும் பொருட்டு நான்கு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- 'பாசல்' சமவாயத்தின் மூலம் தழுவப்படும் பிளாஸ்ரிக் கழிவு பொருள் முகாமைத்துவம் சார்பில் இரண்டு கருத்திட்ட பிரேரிப்புகளும் 'மினமாட்டா' சமவாயத்தின் மூலம் தழுவப்படும் பாதரச முகாமைத்துவத்திற்குரிய வழிகாட்டல்களை தயாரித்தல் மற்றும் அறியச் செய்வித்தல் சார்பில் இரண்டு கருத்திட்ட பிரேரிப்புகளுமாக சுற்றாடல் மாசடைதல் மற்றும் இரசாயன பொருட்கள் முகாமைத்துவ துறையில் நான்கு கருத்திட்டங்களை 2021 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான மானிய நிதியினை வழங்குவதற்கு அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நோர்வே முகவராண்மை, 'மினமாட்டா' சமவாயத்திற்குரிய விசேட சர்வதேச நிகழ்ச்சித்திட்டம், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சுவிற்சர்லாந்து அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் தொழிநுட்ப அபிவிருத்தி அமைப்பு ஆகிய நிறுவனங்களினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் பொருட்டிலான உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்குமாக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.