• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 திறமுறை முன்னாயத்தம் மற்றும் உடனடியாக செயற்படுதல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மேலதிக கடனொன்றைப் பெற்றுக் கொள்ளல்
- COVID - 19 தொடர்பிலான தேசிய ரீதியில் கையாள்தல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் திட்டம் என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கை சனத்தொகையின் 60 சதவீதத்தினருக்கு தடுப்பூசி ஏற்றும் ஆரம்ப குறியிலக்கினை விரிவு படுத்துவதற்கு COVID முகாமைத்துவத்திற்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது. இதன் பொருட்டு COVID - 19 திறமுறை முன்னாயத்தம் மற்றும் உடனடியாக செயற்படுதல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையில் COVID - 19 அவசர நிலைமையின் போது உடனடியாக செயற்படுதல் மற்றும் சுகாதார முறைமை தயார்நிலை கருத்திட்டம் சார்பில் 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மேலதிக கடன் தொகையொன்றை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த மேலதிக கடன் தொகையினை 14 மில்லியன் பைசர் தடுப்பூசி மருந்தளவினை கொள்வனவு செய்வதற்கும் தடுப்பூசி ஏற்றல் பணிகளுக்குரிய ஏனைய செலவுகளுக்காக நிதி இடுவதற்காகவும் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய மேலதிக நிதியிடல் வசதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.