• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய ஊடாக சுற்றுவட்ட அதிவேகப் பாதையின் அத்துருகிரிய இடைமாறல் வரை தூண்களின் மீது செல்லும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு - நிர்மாணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளின் மேற்பார்வைக்காக மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
- இந்த அதிவேகப்பாதையை நிர்மாணிப்பதற்குரிய ஒப்பந்தத்தை வடிவமைத்து, நிர்மாணித்து நிதி வழங்கி, தொழிற்படுத்தி கையளிக்கும் அடிப்படையில் M/s China Harbour Engineering Corporation நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு 2021‑05‑24 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மூன்று (03) வருட காலத்திற்குள் குறித்த அதிவேகப்பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது. உத்தேச வீதியின் தரம் மற்றும் உரிய காலப்பகுதிக்குள் நிர்மாணிப்பு என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு நிர்மாணிப்பு வேலைகள் உட்பட பராமரிப்பு வேலைகளை மேற்பார்வை செய்வதற்காக சுயாதீன பொறியியலாளர் ஒருவராக மதியுரை நிறுவனமொன்றை நியமிக்க வேண்டியுள்ளது. இந்த மதியுரை நிறுவனத்தின் சேவை கொள்வோராக வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயலாற்றுதல் வேண்டும். இதன் பொருட்டு முறையான கேள்வி நடவடிக்கை முறையினை பின்பற்றி பொருத்தமான நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.