• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள, ஆனால் பயன்பாட்டில் கொள்ளப்படாத கனிப்பொருட்களை பயன்படுத்துவதற்கான பொறி முறையைத் தயாரித்தல்
- நாட்டிலுள்ளதும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுமான கனிப்பொருட்களிலிருந்து பொருளாதார ரீதியில் பெருமதி வாய்ந்த கனிப்பொருட்கள் பின்வரும் நான்கு (04) பிரதான வகுதிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* வலுசக்தி உற்பத்தி கனிப்பொருட்கள்

* பெரஸ் மற்றும் பெரோ அலோய் வகுதியைச் சேர்ந்த கனிப்பொருட்கள்

* பெரஸ் அல்லாத கனிப்பொருட்கள்

* உலோகமற்ற கனிப்பொருள் வகைக்குரிய கனிப்பொருட்கள்

இவற்றுள் இல்மனைட், சேர்கோன், ரூடைல் மற்றும் காரீயம் போன்ற கனிப்பொருட்களை அகழ்தல், சுத்திகரித்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் என்பன தற்போது இலங்கை கனிம மணல் கம்பனியினாலும் கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிடெட் நிறுவனத்தினாலும் மேற்கொள்ளப்படுவதோடு தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபையும் இரத்தினக்கல், ஆபரணங்கள் ஆராய்ச்சி நிலையமும் இரத்தினக்கல், ஆபரணங்கள் சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றன. குறித்த கனிப்பொருட்கள் தவிர தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஏனைய கனிப்பொருட்களின் பாவனை சம்பந்தமாக அரசாங்கத்தின் தலையீடு போதுமான அளவு இல்லாமை தெரியவந்துள்ளது. ஆதலால், இத்தகைய கனிப்பொருட்களை முறையாக பொருளாதார ரீதியில் பயன்படுத்தும் பொருட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த கனிப்பொருட்கள் படிவமுள்ள பிரதேசங்கள், இந்த படிவுகளின் அளவு மற்றும் அவற்றை பயன்படுத்தி செய்யக்கூடிய உற்பத்திகள் தொடர்பில் விரிவாக ஆராயும் பொருட்டு துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்தக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக உரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குமாக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.