• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அறிவுநுட்ப பண்புகளின் பலத்தை அளவிடுதல் மற்றும் விருத்தி செய்தல் : இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸின் புதிய அணுகுமுறைகள் தொடர்பில் ஆராய்ச்சி உடன்படிக்கை
- அறிவுநுட்ப பண்புகளின் பலத்தை அளவிடுதல் மற்றும் விருத்தி செய்தல் சம்பந்தமாக இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸின் புதிய அணுகுமுறைகள் தொடர்பில் கூட்டு ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி கருத்திட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸின் டி லா சால் பல்கலைக்கழகம், கனடாவின் வோட்டர்லூ பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் வேக் பொரஸ்ட் பல்கலைக்கழகம் என்பனவற்றினால் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக உரிய பல்கலைக்கழகங்களுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டும் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.