• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய அளவிலான வர்த்தக பாற்பண்ணைகளை தாபிப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்குதல்
- இலங்கையின் திரவப் பால் தேவையின் சுமார் 40 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதோடு மீதி அளவினை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் சுமார் 50 பில்லியன் ரூபா செலவுசெய்யப்படுகின்றது.ஆதலால், பொருளாதார புத்துயிரூட்டல், வறுமை ஒழிப்பு பற்றிய சனாதிபதி செயலணியானது உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்குத் தேவையான பிரேரிப்புகளை இலங்கை முதலீட்டுச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. இதற்கிணங்க, இலங்கை முதலீட்டுச் சபையினால் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளதோடு, இந்த சபையின் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கருத்திட்ட பிரேரிப்புகளை சமர்ப்பித்துள்ள முதலீட்டாளர்களுக்கு தேசிய கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளில் தற்போது பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும பிற அரசாங்கத்திற்குச் சொந்தமானதுமான காணிகள் நவீன பாற்பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்கு பின்வருமாறு 30 வருட காலப்பகுதிக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான நிக்கவரட்டிய பண்ணையிலிருந்து H.B.K.I.R International Investment / Access Agro (Pvt.) Ltd, நிறுவனத்திற்கு 700 ஏக்கரும் Pesara Logistics நிறுவனத்திற்கு 60 ஏக்கரும் குறித்தொதுக்குதல்.

* மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கலபொடவத்த மற்றும் மவுண்ட் ஜின் தோட்டங்களிலிருந்து 811 ஏக்கர்களை Farm's Pride (Pvt.) Ltd, நிறுவனத்திற்கு குறித்தொதுக்குதல்.

* மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான தெல்தொட்ட மற்றும் கிரேட்வெலி தோட்டங்களிலிருந்து முறையே 200 ஏக்கர்களையும் 150 ஏக்கர்களையும் Hillside Agro (Pvt.) Ltd, நிறுவனத்திற்கு குறித்தொதுக்குதல்.

* மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கொட்டுகச்சிய பண்ணையிலிருந்து 250 ஏக்கர்களை Gamma Pizzakraft Lanka (Pvt.) Ltd, நிறுவனத்திற்கு குறித்தொதுக்குதல்.