• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குதல்
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு வழங்கவேண்டிய நிவாரணம் தொடர்பிலான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் தொடர்பில் தரவு முறைமையொன்றைத் தயாரிப்பதற்கு வழிமுறையொன்றை முன்மொழிவதற்கும். உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு 2020 ஒக்றோபர் மாதம் 26ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க COVID - 19 தொற்று நிலைமை மற்றும் உயித்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்குவதற்கு பொருத்தமான நிவாரணங்கள் தொடர்பில் இந்த உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.