• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டு அமைச்சின் சகல பிரிவுகளையும் ஒரே கட்டடத்தில் தாபித்தல்
- தற்போது வெளிநாட்டு அமைச்சு நடாத்திச் செல்லப்படுகின்ற குடியரசுக் கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லாமையினால் இந்த அமைச்சின் சில பிரிவுகள் பிரதான அலுவலகத்திற்கு வௌியே வேறு இடங்களில் நடாத்திச் செல்லப்படுகின்றன. இதன் காரணமாக பல்வேறு நிருவாக ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. அதேபோன்று தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வித்தில் போதுமான இடவசதியுடன் கூடிய கட்டடமொன்றை வெளிநாட்டு அமைச்சுக்காக நிர்மாணிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்ப தற்குத் தேவையான காணித் துண்டொன்றை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமானதும் வித்தியா மாவத்தையில் அமைந்துள்ள துமான தற்போது கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்டு வரும் காணியிலிருந்து குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு வெளிநாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.