• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தனியார்துறை முதலீட்டின் கீழ் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆர்வ வௌிப்படுத்தலுக்கான முன்மொழிவு
- 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சார தேவையின் 70 சதவீதம் மீள்புதுப்பித்தக்க வலுசக்தி தோற்றுவாய்களின் மூலம் ஈடுசெய்து கொள்வது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டின் நீர்மின் அபிவிருத்தி உச்சமட்டத்தை அடைந்துள்ளமையினால் இதன் பொருட்டு சூரியசக்தி மற்றும் காற்று சக்தி என்பவற்றின்பால் கூடிய கவனம் செலுத்தவேண்டியுள்ளது. எதிர்பார்க்கப்படும் இலக்கினை அடைவதற்காக தற்போது 458 மெகாவொட் ஆக தாபிக்கப்பட்டுள்ள சூரியசக்தி ஆற்றலை மேலும் 4,800 மெகாவொட் மற்றும் 248 மெகாவொட் ஆக தாபிக்கப்பட்டுள்ள காற்று சக்தி ஆற்றலை மேலும் 3,500 மெகாவொட் என அமையும் விதத்தில் அதிகரிக்கவேண்டியுள்ளது. அதேபோன்று இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய அணுப்பீட்டு முறைமைக்குள் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேசிய அணுப்பீட்டு முறைமையை நவீனமயப்படுத்தவும் வேண்டும். இதற்கிணங்க, இனங்காணப்படும் 50 மெகாவொட்டுக்கு அதிகமான கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்த கருத்திட்டங்களுக்கு நிதியிடுவதற்கு ஆர்வமுள்ள உள்நாட்டு வௌிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் ஆர்வ வௌிப்படுத்தல் பிரேரிப்புகளை கோரும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.