• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்" சம்பந்தமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட உப குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
- ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது சம்பந்தமாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஆகிய 33 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவைக்கு சமர்ப்பித்த சிபாரிகள் அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

* அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் அங்கீகாரமளித்தல்.

* ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை போன்ற சேவைகளை திணைக்களம் சார்ந்த சேவைகளாக 2021 நவெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிடுதல்.

* அமைச்சரவை உபகுழுவினால் ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ள திருத்தங்களை 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பொன்றின் மூலம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுத்தல்.

* அவர்களுடைய உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 2021 செப்ரெம்பர் மற்றும் ஒற்றோபர் ஆகிய மாதங்கள் தொடர்பில் ரூபா 5,000/- வீதம் விசேட கொடுப்பனவொன்றைச் செலுத்துதல்.

* அமைச்சரவை உபகுழுவின் ஏனைய சிபாரிசுகளை மாகாண சபைகள் மற்றும் ஏனைய உரிய அதிகாரபீடங்களுடன் இணைந்து ஆறு (06) மாதங்களில் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுத்தல்.