• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் இறங்குதுறைக்கு கப்பல்களிலிருந்து நிலக்கரி கொண்டு செல்வதற்கு சுயமாக இயங்கும் ஓடங்களுக்கான சேவைகளை வழங்குநர்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்தல்
- 2021 / 2022 மற்றும் 2022 / 2023 காலப்பகுதியினுள் லக்விஜய மின் நிலையத்தின் இறங்குதுறைக்கு நிலக்கரி ஓடங்கள் மூலம் கொண்டு செல்வதற்கு பொருத்தமான சேவை வழங்குநர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய சேவை ஒப்பந்தத்தை M/s. Shreeji Shipping Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.