• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் கடலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழை அங்கீகரிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை இற்றைப்படுத்துதல்
- வௌிநாடொன்றில் சமுத்திர தேர்ச்சி சான்றிழொன்றைக் கொண்டுள்ள கடலோடி ஒருவருக்கு ஏதேனும் வேறு அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பலொன்றில் சேவையாற்றுவதற்கு குறித்த கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்திட மிருந்து அதற்கு சமமான சான்றிதழொன்றைப் பெற்றுக் கொள்வது கட்டாயமானதாகும். வணிக கப்பல் செயலகத்தினால் ஏற்கனவே இத்தகைய சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கு உரியதாக 33 நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதோடு, இதன்மூலம் இலங்கை கடலோடிகள் பெருமளவானோருக்கு வௌிநாட்டு கப்பல்களில் தொழில்வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இலங்கை 2007 ஆம் ஆண்டில் இத்தகைய சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதோடு இலங்கை கடலோடிகளுக்கு கூடிய தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் குறித்த உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளை திருத்தி இற்றைப்படுத்திய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரினதும் வெளிநாட்டு அமைச்சினதும் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க இற்றைப்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.