• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விதவைகள் தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய கொடுப்பனவினை செலுத்துவதற்கான மேலதிக ஒதுக்கீட்டினை வழங்குதல்
- அரசாங்க சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய நலன்களுக்காக 2021 ஆம் ஆண்டு சார்பில் சுமார் 300,000 மில்லியன் ரூபா பொதுத் திறைசேரியினால் ஏற்கவுள்ளதோடு, இதன்கீழ் விதவைகள் தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்தை செலுத்துவதற்காக மாத்திரம் 35,500 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடானது ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 2021 யூன் மாதம் 30 திகதியளவில் 26,367 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதோடு, ஆண்டின் மீதி காலப்பகுதிக்கு மேலதிகமாக 19,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடானது தேவையாகவுள்ளது. விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்தை செலுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடானது 'விசேட சட்ட ஏற்பாடுகளின்' கீழ் ஒதுக்கப்படுவதோடு, அரசியலமைப்பின் 150 உறுப்புரையின் (2) ஆம் துணை உறுப்புரையின் மூலம் இதன் பொருட்டு நிதி அமைச்சருக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க நிதி அமைச்சரினால் கைச்சாத்திடப்பட்ட விசேட சட்ட அதிகார பத்திரத்தின் (குறைநிரப்பு) மூலம் ஓய்வூதிய திணைக்களத்தின் செலவு தலைப்பின் கீழ் 19,000 மில்லியன் ரூபா கொண்ட நிதி ஏற்பாட்டினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.