• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களை விசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
- இலங்கைக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களை விசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்கு இரு தரப்புக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் வெளிநாட்டு அமைச்சின் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதற்கிணங்க இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.