• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கட்டணங்களைத் திருத்தும் பொருட்டு ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் ஒரு தரப்புக்கு அல்லது தரப்புகளுக்கு இடையிலான அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவர் அத்துடன் சேவைநாடுநர் ஒருவருக்கு இடையிலான சகல கட்டணங்களும் நீதிமன்ற பதிவாளரினால் விதித்துரைக்கப்படுதல் வேண்டும். இதற்கு முன்னர் இந்தக் கட்டணங்கள் விதித்துரைக்கப்பட்டுள்ள 1997‑09‑24 ஆம் திகதியிடப்பட்டதும் 994/7 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கட்டணங்கள் தற்கால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்துவதற்குரிய ஒழுங்குவிகளை வித்துரைத்து 2021‑07‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2234/67 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.