• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- தற்போது COVID தொற்றுநிலைமை உலகம் முழுவதும் பரவியுள்ளதன் காரணமாக சர்வதேச இரத்தினக்கல் சந்தையில் இரத்தினகல்லுக்காக நிலவும் கேள்வி கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. ஆதலால் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையினால் இரத்தினக்கல் ஏற்றுமதி செயற்பாடுகளின் போது அறவிடப்படும் கட்டணங்களுக்கு ஏதேனும் சலுகையொன்றை வழங்குமாறும் விமான சேவைகள் முடங்கியுள்ளமையினால் இணையவழி மூலம் இரத்தினக்கல் ஏற்றுமதி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை செய்து தருமாறும் இரத்தினக்கல் கைத்தொழிலாளர்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இதற்கிணங்க உரிய கட்டணங்களைத் திருத்துவதற்கும் இணையவழியூடாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு உரிய வசதிளை ஏற்பாடு செய்வதற்கும் இயலுமாகும் வகையில் 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் 2021‑06‑18 ஆம் திகதியிடப்பட்டதும் 2232/36 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.