• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையினைக் கொள்வனவு செய்தல் - பெரும்போகம் 2021 / 2022
- 2021‑07‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் பெரும்போகம் 2021 / 2022 பெரும்போகத்திற்குத் தேவையான சேதன பசளையினை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு தேசிய உர செயலகத்தின் அனுமதிப்பத்திரம் உள்ள உள்நாட்டு உர உற்பத்தியாளர்களிடமிருந்து கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி என்பவற்றுக்குத் தேவையான சேதன பசளையினைப் பெற்றுக் கொள்வதற்கான கேள்விகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு தெரிவுசெய்யப்பட் சேதன பசளை உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.