• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரியளவு அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2021 இரண்டாம் காலாண்டு இறுதியிலான முன்னேற்றம்
- நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் பாரியளவு அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சம்பந்தமாக பின்வரும் தகவல்கள் நிதி அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

* 43 அமைச்சுக்களின் கீழ் மொத்த செலவை 1,000 மில்லியன் ரூபாவை விஞ்சிய 319 பாரியளவு கருத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

* 2030 ஆம் ஆண்டுவரை நடைமுறைபடுத்தப்படும் இந்தக் கருத்திட்டங்களின் மொத்த பெறுமதி அண்ணளவாக 7.1 ரில்லியன் ரூபாவாகும்.

* ஏற்கனவே இதில் 1.75 ரில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதோடு, 2021 ஆம் ஆண்டு சார்பில் 745 பில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடானது ஒதுக்கப்பட்டுள்ளது.

* உரிய 319 கருத்திட்டங்களில் அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தி அணுகுகையை உறுதி செய்யும் 88 கருத்திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

* இதன் பொருட்டில் மதிப்பிடப்பட்ட செலவானது 2.5 ரிலியன் ரூபா ஆவதோடு, நடப்பாண்டில் இந்தக் கருத்திட்டங்கள் சார்பில் 232 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்த கருத்திட்டங்களில் அனைவருக்கும் குடிநீர், 100,000 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், நூறு நகரங்கள் நிகழ்ச்சித்திட்டம், நீர்பாசன சுபீட்ச நிகழ்ச்சித்திட்டம், சுபீட்ச உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டம் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களும் அதேபோன்று COVID - 19 தொற்று நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களும் உள்ளடங்கும்.

* நாட்டில் நிலவும் COVID - 19 தொற்று நிலைமை காரணமாக இந்த கருத்திட்டங்களுக்கு முதல் அரையாண்டினுள் குறியிலக்காகக் கொள்ளப்பட்ட செலவில் 55 சதவீதம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் குறியிலக்குகளை அடைவதற்கு இயலுமாகும் வகையில் குறைந்த முன்னேற்றத்தினைக் காட்டுகின்ற கருத்திட்டங்களை மீளாய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைபடுத்துவதற்கும் உரிய காலக்கட்டமைப்பிற்குள் குறித்த கருத்திட்டங்களின் செயற்பாடுகளை முற்றாக்கி அவற்றின் நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் இயலுமாகும் வகையில் இந்தக் கருத்திட்டங்களின் அபிவிருத்தியினை ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையினை அமைச்சின் நெருங்கிய கண்காணிப்பின் கீழ் நடைமுறைபடுத்த வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.