• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்திற்குச் சொந்தமான மோட்டார் வாகன தொகுதி
- அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பில் பின்வரும் தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்று பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்தின் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

* அமைச்சுக்கள் அடங்கலாக அரசாங்க நிறுவனங்கள், அரசாங்க தொழில்முயற்சிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான 82,194 வாகனங்கள் உள்ளன.

* இவற்றுள் 76,661 வாகனங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதோடு, 5,533 வாகனங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளது.

* செயற்பாட்டு நிலையில் உள்ள வாகனங்களில் அமைச்சுக்கள் அடங்கலாக அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமாக 33,931 வாகனங்களும் அரசாங்க தொழில்முயற்சிகளுக்குச் சொந்தமாக 26,395 வாகனங்களும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமாக 16,335 வாகனங்களும் உள்ளன.

* அதேபோன்று அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 8,500 சிரேட்ட உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்கி அவர்களுடைய தனிப்பட்ட மோட்டார் வாகனங்களை உத்தியோகப்பூர்வ மோட்டார் போக்குவரத்து வசதிகளை செய்து கொள்வதற்காக பயன்படுத்தும் பொருட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த தகவல்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தற்போது செயற்பாட்டு நிலையில் இல்லாத வாகனங்களிலிருந்து பழுது பார்க்கக்கூடிய வாகனங்களை துரிதமாக பழுதுபார்த்து பயன்படுத்துவதற்கும் பழுதுபார்க்க முடியாத வாகனங்களை முறையான நடவடிக்கைமுறைகளைப் பின்பற்றி காலம் தாழ்த்தாது பராதீனப்படுத்துவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.