• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலத்திரனியல் பயண அனுமதி மூலம் வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை ஒரே தடவையில் சுற்றுலா விசா வழங்குதல்
- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கீழ் செயற்படுத்தப்படும் "இலத்திரனியல் பயண அனுமதி பத்திரம் வழங்கும் முறைமையின்" ஊடாக சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் செயற்பாட்டிற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை "இலங்கை சுற்றுலா கைத்தொலைபேசி செயலி" என்பதுடன் இணைத்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் சுற்றுலா விசா அனுமதிப் பத்திரமொன்றை வழங்கும் பொருட்டு 2021‑01‑04 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க பின்வருமாறு விசா கட்டணங்களை அறவிட்டு குறித்த சுற்றாலா விசா அனுமதி பத்திரத்தை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

* சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் - 70 ஐக்கிய அமெரிக்க டொலர்கள்.

* சார்க் அல்லாத நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் - 85 ஐக்கிய அமெரிக்க டொலர்கள்.

* சிங்கப்பூர், மாலைத்தீவு, சீசெல்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் - 50 ஐக்கிய அமெரிக்க டொலர்கள். (தற்போது நடைமுறையிலுள்ள இந்த நாடுகளுடனான இருதரப்பு உடன்படிக்கைகளுக்கு அமைவாக)