• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிர்மாணிப்பு இயந்திரங்கள், உபகரணங்கள், ஏனைய சேவைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் என்பவற்றின் கொள்வனவும் அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான பெறுகை
- நிர்மாணிப்பு இயந்திரங்கள், உபகரணங்கள், ஏனைய பொருட்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் என்பவற்றை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக முன் தகைமை பெற்ற வழங்குநர்களிடமிருந்து கேள்வி கோரும் பொருட்டு 2021 மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆறு (06) பொதிகளின் கீழ் நான்கு நிறுவனங்களிடமிருந்து கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய பெறுகையை வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.