• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று நிலைமை காலப்பகுதியில் கல்வி செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு தொலைக்காட்சி சேவைகளின் ஒத்தாசையை பெற்றுக் கொள்ளல்
- COVID - 19 தொற்று நிலைமை காரணமாக பாடசாலைகளை திறப்பதற்கு கடினமாகியுள்ளமையினால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் கீழ் "e-தக்சலாவ" கற்றல் முகாமைத்துவ முறைமை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் "Eye" மற்றும் "நேத்ரா" அலைவரிசைகளை ஒன்றிணைத்து நடைமுறைப் படுத்தப்படும் "குரு கெதர" கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வீட்டிலிருந்தே கற்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று மாகாண கல்வி திணைக்களங்களினால் பிராந்திய வானொலி அலைவரிசைகள், கல்வி முகாமைத்துவ முறைமைகள் மற்றும் "யூடியுப்" அலைவரிசைகளூடாக நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. ஆயினும் தரம் 1 இலிருந்து தரம் 13 வரையிலான சகல பாடங்களும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் ஒலி ஔி பரப்புவதற்கு தற்போது கிடைத்துள்ள ஒலி ஔி பரப்பு காலம் போதுமானதாக இல்லை. ஆதலால் இலங்கை ரெலிக்கொம் நிறுவனத்தினால் கல்வி சார்ந்த ஔி பரப்பு சார்பில் குறித்தொதுக்கப்பட்ட 07 அலைவரிசைகள் "SLT PEO TV" வலையமைப்பின் ஊடாக இலவசமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, "குரு கெதர" கல்வி சார்ந்த இந்த 07 அலைவரிசைகளின் ஊடாக ஔிபரப்புவதற்கும் எதிர்காலத்தில் இந்த அலைவரிசைகளின் எண்ணிக்கையை 20 வரை விரிவுபடுத்துவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.