• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தனியார் கூட்டுறவு பங்களிப்பின் கீழ் புதிய அரிசி ஆலைகளை தாபித்தல்
- நாட்டின் வருடாந்த அரிசி நுகரும் தேவை அண்ணளவாக 2.2 மில்லியன் மெற்றிக்தொன்களாகும். 2020 / 2021 பெரும்போகத்திலும் 2021 சிறுபோகத்திலும் அறுவடையானது அண்ணளவாக 4.8 மில்லியன் மெற்றிக்தொன்களாவதோடு, இந்த அளவில் சுமார் 3.2 மில்லியன் மெற்றிக்தொன்கள் உற்பத்தி செய்ய முடியும். ஆயினும் சந்தையில் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமைக்கு மாற்று வழியாக நெல் அறுவடையிலிருந்து கணிசமான அளவினை கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து கொள்வனவு செய்து அரிசியாக்கி நியாயமான விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கிணங்க தனியார் கூட்டுறவு பங்களிப்பின் கீழ் குருநாகல், அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய ஐந்து (05) அரிசி ஆலைகளை தாபித்து, அடுத்த பெரும்போகத்திலிருந்து நெல் கொள்வனவு செய்து அரிசியாக்கி லங்கா சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக விநியோகிக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.