• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தடுப்பூசி கொள்வனவு
- COVID - 19 தொற்றுநிலைமையிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக முதற்கட்டத்தில் பதினான்கு (14) மில்லியன் சனத்தொகைக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு திட்டமிடப்பட்டதோடு, 2021 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியளவில் 19.49 மில்லியன் தடுப்பூசி மருந்தளவு இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்றது. இந்த தடுப்பூசி தொகையிலிருந்து 11.26 மில்லியன் மருந்தளவானது முதலாவது மருந்தளவாகவும் 3.25 மில்லியன் மருந்தளவானது இரண்டாவது மருந்தளவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. COVID - 19 தொற்று தாக்கத்தை குறைக்கும் நோக்கில் 18 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் 2021 செப்ரெம்பர் மாதம் 30 திகதியளவில் தடுப்பூசி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தடுப்பூசி தேவை சார்பில் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இனக்கப் பேச்சுச் குழுவினால் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட்ட அலகு விலையின் கீழ் 09 மில்லியன் Sinopharm தடுப்பூசியும் 14 மில்லியன் Pfizer தடுப்பூசியும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.