• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான திரவ மருத்துவ ஒட்சிசன் 360,000 லீற்றர்கள் இறக்குமதி செய்தல்
- கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள COVID-19 நோயாளிகள் சார்பில் திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு 120,000 லீற்றர்கள் ஒட்சிசன் மாதாந்தம் இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பரவிவரும் COVID வைரஸ்வகை காரணமாக ஒட்சிசன் தேவைப்படும் அளவு அதிகரித்துள்ளமையினால் போதுமான அளவு ஒட்சிசன் கையிருப்பை நாட்டில் களஞ்சியப்படுத்திவைப்பதற்கு இயலுமாகும் வகையில் தற்போது மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் 120,000 லீற்றர்கள் ஒட்சிசனுக்கு மேலதிகமாக மேலும் மருத்துவ திரவ ஒட்சிசன் 360,000 லீற்றர்கள் இறக்குமதி செய்யும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.