• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீதாவக்க ஏற்றுமதி பதனிடல் வலயத்தின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல்
- இலங்கை ஏற்றுமதி சபையின் கீழ் செயற்படுத்தப்படும் சீதாவக்க ஏற்றுமதி பதனிடல் வலயத்தின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திரிப்பு ஆற்றல் நாளொன்றுக்கு நீர் கனமீற்றர் 9,500 இலிருந்து 15,000 வரை அதிகரிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க முதலீட்டு சபையின் நிதியின் கீழ் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவுசெய்வதற்காக நிர்மாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்களிடமிருந்து கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்தத்தை Sierra Construction (Pvt) Ltd, கம்பனிக்கு வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.