• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டத்தின் கீழ் இழப்பீடுகளை வழங்குவதற்குரியதான கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்
- இழப்பீடுகளுக்கு தகைமை பெறும் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் பொருட்டும் ஏற்ற விதத்தில் தனியாகவும் கூட்டாகவும் இழப்பீடுகளை வழங்குவதற்குமாக 2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இழப்பீடுகளுக்கான அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாகவும் கூட்டாகவும் இழப்பீடுகளை வழங்குவதற்கான கொள்கைகளை தயாரிக்கும் பணிகள் இந்த அலுவலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தயாரிக்கப்பட்ட கொள்கை மற்றும் வழிகாட்டல்கள் சார்பிலும் உரிய வரிசை அமைச்சுடன் இணைந்து குறித்த கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.