• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்தல் - 2022
- 2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்வதற்கு உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கேள்வி கோரப்பட்டுள்ளது. ஐந்து (05) உற்பத்தியாளர்கள் விலைகளை முன்வைத்துள்ளார்கள். இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு விலைகளை கலந்துரையாடியதன் பின்னர் உடன்பாடு காணப்படும் விலைகளின் கீழ் பாடசாலை சீருடைத் துணிகளுக்குரிய தகவுத்திறன்களுக்கு ஏற்ப உற்பத்தி செய்து, பிரித்து, பொதியிட்டு, கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விநியோகிக்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை பின்வரும் நிறுவனங்களுக்கு கையளிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* Vanguard Industries (Pvt.) Ltd,

* Dankotuwa Weaving Mills (Pvt.) Ltd,

* Prabha Tex Industries,

* Creative Textile Mills (Pvt.) Ltd,

* Star Tex (Pvt.) Ltd.