• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தூய இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு வியாபார பெயர் ஊக்குவிப்பு திட்டம்
- 2015 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பொன்றுக்கு அமைவாக தேசிய புலமைச்சொத்துக்கள் அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இலங்கையர்களுக்கு சொந்தமான சிங்க இலச்சினையுடன் கூடிய தூய இலங்கை தேயிலை வியாபர பெயரை ஊக்குவிப்பதற்காக ஊக்குவிப்பு செலவின் 50 சதவீதம் கொண்ட சீராக்கல் மானியமொன்றை வழங்கும் ஊக்குவிப்பு திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2015 / 2016 காலப்பகுதியில் 20 கம்பனிகளும் 2018 / 2019 காலப்பகுதியில் 18 கம்பனிகளும் பயனடைந்துள்ளன. மிக சாதகமான பெறுபேற்றினை பெற்றுக் கொள்வதன் சார்பில் இலங்கை தேயிலைக்கான உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக தனியார் வியாபார பெயர்களை ஊக்குவிப்பதற்கு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவது தேவையானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2021 / 2022 ஆண்டில் வியாபார பெயர் ஊக்குவிப்பு திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி தற்போது 12 நாடுகளிலுள்ள உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை தேயிலை விற்பனை நிலையங்களை (Ceylon Tea Shops and House) மேம்படுத்துவதற்குத் தேவையான ஊக்குவிப்பினை வழங்கும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.