• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் வளித்தரத்தின் நன்மைகளை நிலைபேறுடையதாக பேணும் கருத்திட்டம்
- COVID - 19 நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பெரும்பாலான நாடுகள் முடக்கம் மற்றும் பயணக்கட்டுபாடுகளை அமுல்படுத்தியதன் விளைவாக வீதிகளில் செல்லும் மோட்டார் வாகனங்கள் குறைந்ததன் காரணமாக 2020 மார்ச் மாதத்திலிருந்து குறித்த இந்த நாடுகளில் நகரங்களின் வளித்தரமானது அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய வலையத்திலுள்ள பெரும்பாலான நகரங்களில் COVID - 19 நோய் பரவல் மற்றும் வளித்தரம் என்பவற்றுக்கு இடையிலான தொடர்பு மதிப்பிடப் பட்டிருந்த போதிலும் இது சம்பந்தமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் மிகக் குறைந்த மட்டத்தில் நிலவுகின்றன. இந்த நிலமையின் கீழ் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தினால் 'இலங்கையில் வளித்தரத்தின் நன்மைகளை நிலைபேறுடையதாக பேணும் கருத்திட்டம் : இனங்காணப்பட்ட 25 செயற்பாடுகளை COVID‑19 நிலவும் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துதல்' என்னும் பெயரில் கருத்திட்டமொன்றினை ஆரம்பிப்பதற்கு ஒத்தாசை நல்குவதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பீட்டு செலவு 15,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட இந்தக் கருத்திட்டத்தின் மூலம் "COVID - 19 மற்றும் கொழும்பு நகரத்தின் வளித்தரம்" சம்பந்தமாக கொள்கை ரீதியிலானதும் தொழிநுட்ப ரீதியிலானதுமான பகுப்பாய்வொன்றை மேற்கொள்வதற்கும், வளியின் தரத்தினை விருத்தி செய்வதற்கு கொள்கை தயாரிக்கப்பட வேண்டிய துறைகளை இனங்காண்பதற்கும் வளித்தரத்தின் நன்மைகளை நிலைபேறுடையதாக பேணுவதற்கும் சுத்தமான வளியின் தரத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகளின் பெறுபேறுகளை காட்டும் உயர் மட்ட நிகழ்ச்சித்திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தின் பெறுபேறு மற்றும் கண்டுபிடிப்புகள் "கொழும்பு நகரத்தில் தொற்றின் பின்னரான வளித்தரத்தின் நன்மைகளை நிலைபேறுடையதாக விருத்தி செய்தல்" தொடர்பில் தரப்பினர்களின் கலந்துரையாடல்களின் போது பகிர்ந்தளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.