• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு
- தற்போது உள்நாட்டு சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு பற்றி அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது. இது சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து உள்நாட்டு சந்தையில் பால்மாவின் விலையினை அதிகரிக்காது பால்மா இறக்குமதி செய்வதற்கு நடைமுறையிலுள்ள இறக்குமதி தீர்வையை திருத்துவதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான வழிமுறையொன்றை பின்பற்றுவதன் மூலமோ போதுமான அளவு பால்மா உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சருக்கு அதிகாரத்தினைக் கையளிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.