• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேதனப் பசளை, இயற்கை கனிய மற்றும் Chelated நுண் தாவர போசாக்குகளை இறக்குமதி செய்தல் - 2021/2022 பெரும்போகம்
- உள்நாட்டு சேதனப் பசளை உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாத 2021/2022 பெரும்போகத்திற்குத் தேவையான பசளையை போட்டி கேள்வி வழிமுறையினைப் பின்பற்றி இறக்குமதி செய்வதற்கு 2021‑05‑31 ஆம் திகதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizers Company Ltd., நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து தேவையான பசளைத் தொகையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சர்வதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக உரிய பெறுகையை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.