• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல்
- 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 60 ஆம் பிரிவின் 5 ஆம் உப பிரிவைத் திருத்துவதற்கு 2021‑07‑19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. முக்கியமாக சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலைகளை விட கூடுதலான விலைக்கு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு இந்த திருத்தங்களின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதோடு, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.