• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌிநாட்டு விவாகரத்து, திருமணத்தை இரத்துச் செய்தல் அல்லது சட்டபூர்வமான பிரிவு நிலையை இலங்கையில் அங்கீகரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்தல்
- இலங்கையில் திருமணமாகி அதன் பின்னர் வௌிநாடுகளில் குடியிருக்கும இலங்கையர்கள் அந்த நாடுகளில் திருமண வழக்குகள் தொடுப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளும் தீர்ப்புகள் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணமாக அத்தகைய தர்ப்பினர்கள் சிரமங்களுக்கு ஆளாகவேண்டி நேரிட்டுள்ளது. நாட்டினுள் இத்தகைய வழக்குத் தீர்பொன்றுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அவர்கள் மீ்ண்டும் இலங்கையில் விவாகரத்து வழக்கொன்றினை தொடுக்க வேண்டும். ஆதலால் வௌிநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவாகரத்து, திருமணத்தை இரத்துச் செய்தல் அல்லது சட்டபூர்வமான பிரிவு நிலை என்பவற்றை அங்கீகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் சட்ட ஏற்பாடுகளை செய்வது பொருத்தமானதென நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குடும்ப சட்டங்கள் தொடர்பான ஆலோசனை குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வௌிநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவாகரத்து, திருமணத்தை இரத்துச் செய்தல் அல்லது சட்டபூர்வமான பிரிவு நிலை என்பவற்றை இந்நாட்டில் அங்கீகரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.