• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக தரமுயர்த்தும் பொருட்டு 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் சட்டத்தை திருத்துதல்
- 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் அடிப்படை மட்டத்திலிருந்து முகாமைத்துவ மட்டம் வரையிலான பயிற்சி பாடநெறிகளை நடாத்தி வருகின்றது. தற்போது இந்த பாடநெறிகளுக்கு சமமான மட்டத்திலான பாடநெறிகள் சில பல்கலைக்கழகங்களினாலும் தனியார்துறை நிறுவனங்களினாலும் நடாத்தப்பட்ட போதிலும் இந்த பாடநெறிகள் முக்கியமாக கோட்பாட்டு ரீதியாக மாத்திரம் அடிப்படையாகக் கொண்டுள்ளமையினால் கள மட்டத்தில் செயன்முறை பயிற்சிகள் இந்த பாடநெறிகளின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவதில்லை. ஆதலால் போதுமான களப் பயிற்சியுடன் சுற்றுலாத்துறை சார்ந்த பட்ட பாடநெறிகளை இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் நடாத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தை மூன்றாம் நிலை உயர் கல்வி நிறுவனமொன்றாக தரமுயர்த்துவதற்கும் இயலுமாகும் வகையில் 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் சட்டத்தை திருத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.