• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் (பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டத்தை திருத்துதல்
- தன்னார்வ அமைப்புகளை பதிவு செய்வதற்கு நடைமுறையிலுள்ள 1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் (பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் இல்லையென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் (பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டத்திற்கு பதிலாக தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.