• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் அவுஸ்திரேலியாவின் Edith Cowan பல்கலைக் கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்தல்
- இரு தரப்பிற்கும் இடையில் பரஸ்பரம் உடன்பாடு காணப்படும் துறைகளில் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை விருத்தி செய்தல், இரு தரப்பு தேவைகளுக்கு அமைவாக மாணவர்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், உபசரிப்பு தொடர்பில் நிறைவேற்று கல்வி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல், பாடத்திட்டங்கள் மற்றும் பாடநெறிகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் உட்பட ஒன்றிணைந்த கலாநிதி பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் அவுஸ்திரேலியாவின் Edith Cowan பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை இரு தரப்பினர்களுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.