• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காட்டு யானைகள் அடங்கலாக பாதுகாக்கப்பட்ட காட்டு மிருகங்களினால் ஏற்படும் சேதங்களுக்கு நட்டஈடு செலுத்தும் முறையைத் திருத்துதல்
- பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்குகளான யானை, புலி, கரடி, காட்டெருமை மற்றும் முதலை போன்றவற்றின் தாக்குதல் காரணமாக மரணிக்கின்ற மற்றும் முழுமையாக அத்துடன் பகுதியளவில் அங்கவீனமடைபவர்களுக்கும் வீடு மற்றும் சொத்துக்களுக்கான சேதங்களுக்கும் தற்போது செலுத்தப்பட்டுவரும் நட்டஈட்டுத் தொகையை பின்வருமாறு திருத்துவதற்கு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மரணமொன்றுக்காக இதுவரை செலுத்தப்பட்ட 500,000/- ரூபாவைக் கொண்ட நட்டஈட்டுத் தொகையை பால் மற்றும் வயது வேறுபாடின்றி 1,000,000/- ரூபாவரை அதிகரித்தல்.

* முழுமையாக அங்கவீனமுற்ற ஒருவருக்கு இதுவரை செலுத்தப்பட்ட500,000/- ரூபாவைக் கொண்ட நட்டஈட்டுத் தொகையை பால் மற்றும் வயது வேறுபாடின்றி 1,000,000/- ரூபாவரை அதிகரித்தல்.

* பகுதி அங்கவீனமுற்ற அல்லது உடல் ரீதியிலான காயங்களுக்காக இதுவரை செலுத்தப்பட்ட 75,000/- ரூபாவைக் கொண்ட நட்டஈட்டுத் தொகையை 150,000/- ரூபாவரை அதிகரித்தல்.

* காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக சேதமடையும் வீடு மற்றும் சொத்துக்களுக்காக இதுவரை செலுத்தப்பட்ட 100,000/- ரூபாவைக் கொண்ட நட்டஈட்டுத் தொகையை ஆகக்கூடுதலாக 200,000/- ரூபாவரை அதிகரித்தல்.