• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய ஏற்பாட்டியல் தினத்தைக் (National Logistics Day) கொண்டாடுதல்
- நாட்டின் சகல விநியோகங்களையும் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் கையாள்தல் ஏற்பாட்டியலென (Logistics) அழைக்கப்படுகின்றது. அதற்குரிய செயற்பாட்டினை உரிய வகையில் கையாள்வதற்கு முடியாமற் போகுமாயின் பொருட்களின் விலை அதிகரித்தல், இதன் காரணமாக வாழ்க்கைச் செலவினை கட்டுப்படுத்துவது கடினமாதல் போன்ற பிரச்சினைகள் பல உருவாகலாம். ஆதலால் ஏற்பாட்டியலுக்குரிய (Logistics) செயற்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு அறியச் செய்விக்கும் நோக்கில் தேசிய ஏற்பாட்டியல் தினத்தை (National Logistics Day) பிரகடனப்படுத்துவது பொருத்தமானதெனத் தெரியவந்துள்ளது. இதற்கிணங்க இந்த ஆண்டு முதல் ஆண்டுதோரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதியை ஏற்பாட்டியல் (Logistics) தினமாக பிரகடனப்படுத்துவதற்கும் இந்த தினத்தை குறிக்கும் முகமாக இந்த ஆண்டில் ஞாபகார்த்த முத்திரையொன்றை வௌியிடுவதற்குமாக போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.