• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், தேசிய நீரகவள மூலங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மை (NARA) மற்றும் நோர்வே Arctic பல்கலைக்கழகம் என்பவற்றுக்கிடையில் கூட்டு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
- உலகளாவிய கல்வி ஒத்துழைப்பிற்கான நோர்வே பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி பங்களிப்பின் கீழ் நோர்வே Arctic பல்கலைக்கழகத்தினால் "கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் நீரியல் விஞ்ஞானம் தொடர்பிலான புத்தாக்க வலயமைப்பு" என்னும் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தின் இந்நாட்டு தரப்பாக ருகுணு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், தேசிய நீரகவள மூலங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மை (NARA) என்பன இனங்காணப்பட்டுள்ளன. இதற்கிணங்க இந்த உடன்படிகையின் கீழ் நோர்வே Arctic பல்கலைக்கழகத்திற்கும் இந்நாட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் இருதரப்புக்கும் நன்மை கிடைக்கும் விதத்தில் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், மாணவர் மற்றும் பதவியணியினருக்கு இடையில் பரிமாறல் நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்தல் மற்றும் சர்வதேச புரிந்துணர்வுகளை மேம்படுத்துதல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. இதற்கிணங்க உத்தேச கூட்டு உடன்படிகையினை செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.