• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் விஞ்ஞானம் மற்றும் சமயம் தொடர்பிலான உலகளாவிய வேறுபட்ட வளங்களின் ஆய்வுக்கான ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்று சார்பில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- தொழில்சார் விஞ்ஞானிகள் மற்றும் ஏனைய பொது மக்களிடையே விஞ்ஞானம், பரிணாமம் மற்றும் சமயம் என்பவற்றகிடையிலான தொடர்புகள் பற்றி கலந்துரையாடல்களை ஏற்படுத்துதல் அது தொடர்பில் பொதுவான கருத்துக்களுக்கு தாக்கத்னை செலுத்தும் வரலாற்று, கலாசார, சமூக மற்றும் உளவியல் காரணிகள் தொடர்பில் ஆய்வு செய்தல் என்பற்றை நோக்காக கொண்டு, "Templeton Religious Trust" என்னும் மதம்சார் நிதியத்தின் நிதி ஏற்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் "விஞ்ஞானம் மற்றும் சமயம் தொடர்பிலான உலகளாவிய வேறுபட்ட வளங்களின் ஆய்வு" என்னும் ஆராய்ச்சி கருத்திட்டத்தின்' தரப்பொன்றாக கொழும்பு பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த ஆராய்ச்சி கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு இதன் பிரதான தரப்பொன்றான ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்துடன் கூட்டு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.