• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
BCS - தகவல் தொழிநுட்ப பட்டயம் பெற்ற நிறுவனத்திற்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தாபன ரீதியிலான அங்கத்துவ உடன்படிக்கை
- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் BCS - தகவல் தொழிநுட்ப பட்டயம் பெற்ற நிறுவனத்திற்கும் இடையில் தாபன ரீதியிலான அங்கத்துவ உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. பிரித்தானிய கணனி சங்கமாக இதற்கு முன்னர் அழைக்கப்பட்ட BCS - தகவல் தொழிநுட்ப பட்டயம் பெற்ற நிறுவனம் கணனிமயப்படுத்தல் சம்பந்தமாக தகைமைகளையும் அனுபவங்களையும் கொண்டவர்களை தொழில்சார் உறுப்பினர்களாக பதிவு செய்கின்றது. இந்த நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கின்றவர்களை மதிப்பிடும் பணிகளில் ஈடுபடுவதற்காக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு பிரத்தியேகமற்ற அனுமதி பத்திரமொன்றை வழங்குவதற்கு BCS - தகவல் தொழிநுட்ப பட்டயம் பெற்ற நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க நடவடிக்கையினை எடுப்பதற்கு தாபன ரீதியிலான அங்கத்துவ உடன்படிக்கையொன்றைச் கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.