• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வைத்தியசாலைகள் உட்பட சுகாதார நிறுவனங்களுக்குத் தேவையான சத்திர சிகிச்சை துணிகளை உள்நாட்டு வழங்குநர்களிடமிருந்து கொள்வனவு செய்தல்
- மருத்துவ வழங்கல் பிரிவின் வருடாந்த சத்திர சிகிச்சை துணி தேவையை உள்நாட்டு சிறிய அளிவிலான உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு 2012 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2021 ஆம் ஆண்டிற்குத் தேவையான 30 மில்லியன் மீற்றர்களைக் கொண்ட சத்திர சிகிச்சை துணிகளை 774 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு 461 உள்நாட்டு வழங்குநர்களிடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.