• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய சேவை வழங்கல் நிலைய மொன்றிற்கான முதலீடு
- தெற்காசிய வலயத்தின் கேந்திர துறைமுகமான கொழும்பு துறைமுகம் சேவை வழங்கும் கேந்திர நிலையமொன்றாக அபிவிருத்தி செய்வது தேசிய துறைமுகங்களுக்கான பிரதான திட்டத்தின் திறமுறை ரீதியிலான நோக்கங்களில் ஒன்றாகும். இதன் கீழ் கொழும்பு தெற்கு துறைமுகத்துக்குச் சொந்தமான Battenberg மற்றும் Bloemendhal ஆகிய பிரதேசங்களை சேவை வழங்கும் பிரதேசங்களாக அரசாங்க - தனியார் பங்குடமையின் கீழ் அபிவிருத்தி செய்யக்கூடிய பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கை துறைமுக அதிகாரசபையின் உள்ளக கொள்கலன் கையாள்கை நிலையத்தை கப்பல் சரக்கு சேவைகளை வழங்கும் வசதிகளுடன் நிர்மாணிப்பதற்கு சமகி கொள்கலன் முனையம் (UTC) பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் (WCT) என்பவற்றின் கையாள்கைப் பணிகளை பகுதியளவில் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதற்கிணங்க கொழும்பு துறைமுகத்தின் கையாள்கை ஆற்றல் ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் கொள்கலன்களை விஞ்சும். இந்த நிலைமையின் கீழ் துரிதமாக சேவை வழங்கும் நிலையமொன்றைத் தாபிக்கும் தேவை எழுந்துள்ளதோடு, இதன் பொருட்டு Colombo International Container Terminal (CICT) கம்பனியினால் முதலீட்டு பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க கொழும்பு துறைமுக நகரத்தின் எல்லையான தெற்காசிய Battenberg முனையம் (SAGT), Colombo International Container Terminal (CICT) மற்றும் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) ஆகிய முனையங்களுக்கு அருகாமையில் அண்ணளவாக 5.3 ஹெக்டாயர் விஸ்தீரணமுடைய காணியில் கொழும்பு தெற்கு துறைமுகத்தின்' Battenberg பிரதேசத்தில் அரசாங்க - தனியார் பங்குடமையின் கீழ் கப்பல் சரக்கு சேவைகள் வழங்கும் நிலையமொன்றை நிர்மாணிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்பினை மதிப்பிடும் பொருட்டு இணக்கப் பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்குமாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.